Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

Deal Score+1
Deal Score+1

1 பூர்வ பிரமாணத்தை
அகற்றி, நாதனார்
சிறந்த புது ஏற்பாட்டை
பக்தர்க்கு ஈகிறார்.

2 ஜோதியில் ஜோதியாம்
மாசற்ற பாலனார்,
பூலோகப் பாவத்தால் உண்டாம்
நிந்தை சுமக்கிறார்.

3 தம் பாலிய மாம்சத்தில்
கூர் நோவுணர்கிறார்;
தாம் பலியென்று ரத்தத்தில்
முத்திரை பெறுகிறார்.

4 தெய்வீக பாலனே,
இயேசு என்றுமே நீர்
மெய் மீட்பராய் இந்நாளிலே
சீர் நாமம் ஏற்கிறீர்.

5 அநாதி மைந்தனாய்,
விண் மாட்சிமையில் நீர்
பிதா நல்லாவியோடொன்றாய்
புகழ்ச்சி பெறுவீர்.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo