Raavin Kulirilae – ராவின் குளிரிலே
ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2
1.விண்ணுலகத்தை
விட்டு வந்தாரே
மண்ணின் மாந்தர் பாவம் போக்க
மனுவாய் வந்தாரே-2
ராவின் குளிரிலே
2.தந்தை தேவனே
எங்கள் இராஜனே
சொந்தமாக தந்ததாலே
நிந்தை நீங்கிற்றே-2
ராவின் குளிரிலே
3.மேய்ப்பர் கண்டனர்
ஞானிகள் தொழுதனர்
(இந்த) உலகின் இரட்சகர்
மனுவாய் பிறந்தார்
ஆ.. என்ன பாக்கியமே-2
ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2