Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே
1. இரட்சகரை நேசிப்போரே!
வாருங்கள் சகோதரரே!
அவரைப் பின் செல்வோம்;
சரீர துக்கம் துன்பமும்
மேல் வீட்டில் மகா இன்பமாம்!
ஆகையால் சகிப்போம்
பல்லவி
ஜீவிக்கிறார் என் மீட்பர்!
என் மீட்பர் ஜீவிக்கிறார்
2. ஜீவாமிர்தம் குடிக்கிறோம்
மா இன்பத்தை ருசிக்கிறோம்
இயேசுவின் நேசமே!
இவ்வின்பம் மா திரட்சியாய்
பாயுதெமக்குப் பூர்த்தியாய்!
பருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார்
3. தேவ புரி சேரும் போது
சிங்காசனம் சூழும்போது
இன்பங் கொண்டாடுவோம்!
இயேசு தன் வீரர்களண்டை,
ஏகி வற்றாத ஊற்றண்டை
நடத்தி ஆள்வாரே! – ஜீவிக்கிறார்
4. ஆமென்! ஆமென்! என்று சொல்வேன்
பரத்தில் உம்மைச் சந்திப்பேன்;
அங்கோர் வீடடைவேன்!
இதோ எனதெல்லாம் தந்தேன்
அதோ மோட்சத்தில் சந்திப்பேன்
அங்கே பிரிந்திடோம் – ஜீவிக்கிறார்