Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே
சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்
1. இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்
2. பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே
3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவ சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே
Santhosha vinnnnoliyae
Yesu saantha soroobiyavar
Pallaththaakkin leeli saaronin rojaa
Paaril malarnthuthiththaar
1. Inba paralokam thurandhavar
Thunbam sagiththida vandhavar
Paava manidharai meettavar
Baliyaagavae pirandhaar
2. Boologa maenmaigal thaedaathavar
Paerum pugalum naadaathavar
Ondrana mei devan Yesuvae
En aathma ratchagarae
3. Jeevan vazhi saththiyam ellaamivar
Devaathi deva sudhan ivar
Yesuvallaal veru yaarumillai
Ratchannyam eendhidavae