செல்லுவோம் வாரீர் selluvom vareer

Deal Score+3
Deal Score+3

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம்
ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து
கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம்
மூங்கில்தடியாலே – ஓங்கியே அடிக்க
ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்லுவோம்
சத்துருவின்கையில் உற்ற ஆட்டை மீட்க
மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்லுவோம்
கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற
அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்லுவோம்
பாவவினைபோக – தேவ தயவாக
ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க – செல்லுவோம்
நித்திய சாவின் கூரை – பக்திதேகத்தேற்று
வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்லுவோம்
கடனாளிகட்குப் – பிணையாளியாக
உடலுயி ரீந்த – உன்னதனைப் பார்க்க – செல்லுவோம்
பிடித்து உதைத்து – இடித்து வதைத்து
அடிக்கப்படும் நல் – ஆட்டுக்குட்டியைப் பார்க்க – செல்லுவோம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo