சித்தம் கலங்காதே – Siththam Kalangathae
சித்தம் கலங்காதே – Siththam Kalangathae
பல்லவி
சித்தம் கலங்காதே, பிள்ளையே,
செய்வதெ னென்று.
சரணங்கள்
1. சுத்தனுக்குன் (கர்த்தனுக்குள் ) நிலை காட்டு,
கவலையெல்லாம் நீ யோட்டு,
அத்தனே உந்தனை மீட்டு
அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம்
2. மெய்யானுக்குன் குறை சொல்லு,
வேண்டியதடைந்து கொள்ளு,
துய்யனிடம் நீ செல்லு,
துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம்
3. எங்கே நானேகுவே னென்று
ஏங்கித் தவிக்காதே நின்று,
துங்க னெல்லாத்தையும் வென்று
சுகமளிப் பாரோ வென்று. – சித்தம்
4. பரலோக வாழ்வை நாடு,
பரன் தயவை நீ தேடு,
தரை யின்பம் விட்டுப் போடு,
தகாக் கவலை விட் டோடு. – சித்தம்
Siththam Kalangathae song lyrics in English
Siththam Kalangathae Pillaiyae
Seivathae Entru
1.Karthanukkul Nilai Kaattu
Kavalaiyellaam Nee Yottu
Aththanae Unthanu Meettu
Aravanaippaar Nee Sattu
2.Paraloga vaalvai Naadu
Paran Thayavai Nee Theadu
Tharai Inbam Vittu Podu
Thakaak Kavalai Vittodu