தோத்திரம் பாடிப் போற்றுவேன் – Sthothiram Paadi Pottruvean

Deal Score+1
Deal Score+1

தோத்திரம் பாடிப் போற்றுவேன் – Sthothiram Paadi Pottruvean

1. தோத்திரம் பாடிப் போற்றுவேன்
தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியும் அந்தமு மில்லோனே
அரூபனே உமக்கென்றும் தோத்திரம்

அல்லேலூயா அல்-லேலூயா
பொற்பரனே – ஒமேகாவே

2. பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே
புல்லணை மீதிலே தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாவம் தீர்த்த
பெத்தலை வாசனே தோத்திரம்

3. மாயமாம் உலகை மறந்து நானும்
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் தோத்திரம்!

4. மங்களமே சீயோன் மணாளா!
மாறாத பூரண சீராளா!
மங்கிடா நித்திய வாசனே!
மாசற்ற அன்புக்காய் தோத்திரம்!

5. அமரர் போற்றும் அழகுள்ளோனே!
அரூபியே சொரூபியே தோத்திரம்!
அளியும் ஆதி அன்பையே!
வழியில் விரைந்து செல்லவே!

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து,
உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்;
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
And ye shall eat in plenty, and be satisfied,
and praise the name of the LORD your God,
that hath dealt wondrously with you:
and my people shall never be ashamed.
யோவேல் :Joel: 2:26✝️

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo