
தள்ளப்பட்ட கல்லான என்னை – Thallapatta Kallana Ennai
தள்ளப்பட்ட கல்லான என்னை – Thallapatta Kallana Ennai
தள்ளப்பட்ட கல்லான என்னையுமே
மூலைக்கு தலைகல்லாய் மாற்றினீரே -2
நான் வணங்கும் இயேசுவே என்றும்
பெரியவராய் ஒரு போதும்
கை விடாமல் காப்பவரே -2
பாவியாக இருந்த என்னை
உலகம் வெறுத்த வேளை
நீர் என்னை வெறுக்காமல்
பாதுகாத்தீரே
ஆவியான தெய்வமே என்றும்
பெரியவராய்
ஒரு போதும் கைவிடாமல் காப்பவரே -2
– தள்ளப்பட்ட
இருள் என்னை சூழ்ந்த வேளை
பயம் என்னை உடைத்த வேளை
பயப்படாதே என்று சொல்லி
வலக்கரத்தால் தாங்கினீரே
– ஆவியான தெய்வமே
இருளில் வெளிச்சம் நீர் ஒருவரே
கருவில் என்னை சுமந்தவர் நீர்
எனை காக்கும் தெய்வம் நீரே
நீரே நீர் ஒருவரே
உம்மை விட்டு தூரம் சென்ற போதிலும்
பாவ சேற்றில் விழுந்த போதிலும்
என்னை மீட்டு கொண்ட தெய்வம் நீர் ஒருவரே



