Thanthai Siru paalanae Lyrics – தந்தை தன் சிறு பாலனை
Thanthai Siru paalanae Lyrics – தந்தை தன் சிறு பாலனை
1 தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.
2 அவ்வாறே என்னை, தந்தையே (பிதாவே ),
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.
3 மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை (பயத்தை ).
4 அவ்வாறே, நேச ரசஷகா (ரட்சகா )
உம் அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.
5 தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.
6 அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.
Thanthai Siru paalanae Lyrics in English
1.Thanthai Siru paalanae
Kaiyeanthi Thaanguvaan
Seeratta Pettra Paalagan
Abaayam Ninaiyaan
2.Avvarae Ennai Thanthaiyae
Kaappattri Thaanguveer
En Belaveenam Neengavum
Kaiyenthi Varuveer
3.Maathavin Neasa Madiyil
Saainthaadum Kulanthai
Thaayaarin Mugam Paarkkaiyil
Marakkum Kilasaththai
4.Avvarae Neasa Ratchaka
Um Arul Mugaththai
Naan Paarkka Sthiramaakuveer
En Visuvaasaththai
5.Thaai Thanthai Pakkam Paalarai
Utkaara Vaikkunkaal
Santhosiththullam Kalippaar
Pettrorin Anbinaal
6.Avvaarae Thirupathathil
Aanantham Adainthean
Menmealum Arul Naatharae
Pearanbai Rusippean
https://www.worldtamilchristians.com/blog/oh-siru-nagar-bethlehem-christmas-song-lyrics/