Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே
1.தந்தை சுதன் ஆவியே
ஸ்வாமியாம், திரியேகரே
வானாசனமீதுற்றே
எங்களுக்கு இரங்கும்
2 எங்களை நீர் மீட்கவும்
ராஜாசனம் விட்டிங்கும்
வந்தீர் ஏழையாகவும்
கேளும் தூய இயேசுவே
3.பாவிகள் விருந்தரே
பாதத்தழும் பாவிக்கே
நேச வார்த்தை சொன்னீரே
கேளும், தூய இயேசுவே
4.சீமோன் மறுதலித்தும்,
அவன் கண்ணீர் சிந்தவும்
கண்டித்தீர் நீர் நோக்கியும்
கேளும், தூய இயேசுவே
5.வாதைச் சிலுவைநின்றே
இன்று பரதீசிலே
சேர்வாய் என்றுரைத்தீரே
கேளும், தூய இயேசுவே
6.நீசர் நிந்தை சகித்தீர்
பாவிக்காய் நொறுங்குண்டீர்
பாவமின்றித் தீர்ப்புற்றீர்
கேளும், தூய இயேசுவே
7.ஆண்டீர் சிலுவையினால்
மீட்டீர் சுத்த ரத்தத்தால்
மாண்டீர் கொடும் சாவினால்
கேளும், தூய இயேசுவே
8.தப்பிப்போனார் மேய்ப்பரே
நோவில் ஆற்றல் செய்வோரே
ஆழ்ந்து போனார் ஓலமே
கேளும், தூய இயேசுவே
9.மாசில்லா உம் தூய்மையும்
எங்கள் பாவம் நீக்கவும்
மனஸ்தாபம் ஈயவும்
கெஞ்சிகின்றோம், இயேசுவே
10.பாவத்தை அகற்றியே
திவ்விய அருள் பேணியே
உம் சமூகம் நாடவே
கெஞ்சிகின்றோம், இயேசுவே
11.நாங்கள் உம்மை நம்பவும்
ஆசாபாசம் நீக்கவும்
பக்தர் சாந்தர் ஆகவும்
கெஞ்சிகின்றோம், இயேசுவே
12.பாவத்துக்குச் சாகவும்
நீதிக்குப் பிழைக்கவும்
ஜீவ பாதை செல்லவும்
கெஞ்சிகின்றோம், இயேசுவே
13.எங்கள் போர் முடியவும்
நீள் பிரயாணம் ஓயவும்
நாங்கள் இளைப்பாறவும்
கெஞ்சிகின்றோம், இயேசுவே