
Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை
1. தத்தளிக்கும் ஏழை என்னை
தற்காத்திடும் ஐயனே!
தொய்ந்து ஆடும் என் சிரசை
தாங்கப் பெலன் தாருமேன்!
நம்பி இதோ!
என்னைத் தத்தஞ் செய்கிறேன்
2. புசல் காற்றுச் சீறும் நாளில்
நம்பாமல் நான் திகைத்தேன்;
கண்ணால் காணாக் காட்சிகளில்,
உள்ளம் நிற்க ஜெபித்தேன்
நேச மீட்பா!
உம்மை நம்ப ஏவுமேன்
3. ஜெயம் பெறும் நம்பிக்கையை
என்னில் உயிர்ப்பியுமேன்;
போர் அகோர நாள் என்னண்டை
நீர் நிற்ப துணர்த்துமேன்;
தோல்வி காணா
நம்பிக்கையால் ஜெயிப்பேன்!