Thayai Seivai Naatha – தயை செய்வாய் நாதா
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கிஅன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் -தயை செய்வாய்
என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் -தயை செய்வாய்
உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் -தயை செய்வாய்