UDHAVADHA ENNIL URAVANERAE song lyrics
உதவாத என்னில் உறவானீரே
உம் அன்பை நினைக்கிறேன் -2
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாஞ்சையய்யா
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாழ்க்கையய்யா
(1) (உதவாத என்னில்)
சுயம் எண்ணில் சாம்பலாய் மாற
தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2)
உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து
என்னை மாற்றுமய்யா (2)
(2) (இயேசய்யா…..)
வருத்தத்தோடு வருந்துகிறேன்
வேகமாய் என்னிடம் வாருமய்யா(2)
என்னாலே ஒன்றும் முடியாது அய்யா
நீரே வாருமய்யா (2)
(3) (இயேசய்யா…..)
மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை
சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2)
உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து
உம்மோடு வாழ்ந்திடுவேன் (2)
(இயேசய்யா…..)