Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics
என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது
கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது
உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2)
1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால்
2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால்
3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என் கால்