Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்
உம்மை ஒருபோதும் மறவேனே நான்
உம்மை மறவேனே நான்
உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்
உம்மை புகழ்வேனே நான்
நீர் எனக்காகவே பிறந்தீர்
நீர் எனக்காகவே ஜெனித்தீர்
இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்து
போற்றும் அற்புத பாலனை _ஒரு போதும்
1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்
அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார்
2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்
எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய்
3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதே
பாரின் பாவம் போக்கி நீர் என்றென்றும் எங்களை வாழச்செய்வாய்