Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா
Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா
உம்மைப்போல யாருமில்லப்பா
உம்மைப்போல யாருமில்லப்பா-2
நீரே பெரியவரே
நீரே உயர்ந்தவரே
நீரே சிறந்தவரே
உம்மைப்போல யாரும் இல்ல-2
1.அனாதையாய் நான் அலைந்தேன் ஐயா
அன்பு காட்டிட யாருமில்ல
நான் அறியாதிருந்தும் உம்மை தேடாதிருந்தும்
என்னை தேடி வந்தீர் ஐயா
2.உலகத்தால் நான் தள்ளப்பட்டேன்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டேன்
நான் அறியாதிருந்தும் என்னை தேடிவந்து
என் சொந்தமானீர் ஐயா
3.அற்பமாக நான் எண்ணப்பட்டேன்
குப்பையாக நான் ஒதுக்கப்பட்டேன்
என்னை தேடிவந்து என் கண்ணீரை துடைத்து
என்னை உயர்த்தி வைத்தீரையா
உம்மைப்போல யாருமில்லப்பா