Un Kannukulle Kanmaniyaai song lyrics – உன் கண்ணுக்குளே கண்மணியாய்
Un Kannukulle Kanmaniyaai song lyrics – உன் கண்ணுக்குளே கண்மணியாய்
உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன்
காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே
இனிய ஏசுவே நான் காண்கின்றேன்
உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவா
உயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவா
உன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன்
உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே
உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை
நல்ல மேய்ப்பன் உந்தன் வழியில் எந்த குறைவும் இல்லை
உன் மந்தை சேர்ந்த ஆட்டை போல என்றும் நான் வாழவே
எந்த தீங்கும் என்னை தொடாமல் என்னை காத்திடுமே