Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே
உணர்வாயே பாவி
பல்லவி
ஓகோ யேசுவின் நேசமதுரமே
உணர்வாயே பாவி
சரணங்கள்
1.ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம்
வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.- ஓகோ
2.மாகொடும் பாவம தாலழும் பாவியே
ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.- ஓகோ
3.பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே
நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?- ஓகோ
4.சத்ரு பூலோகந்த் தயாபர நேசம்
வைத்த பொருளிதை மறந்திடலாமோ?- ஓகோ
5.நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.- ஓகோ
6.நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த
உன்னத நேசம் ஒப்புள தாமோ?- ஓகோ
7.தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும்
சாவினைப் போக்கும் சற்குரு நேசம்.- ஓகோ
8.இக்கணம் யேசுவையே விசுவாசி
அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்.- ஓகோ