Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன்
Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன்
உங்களால நான் உயிர் வாழ்கிறேன்
உங்க அன்பால் நான் இன்றும் வாழ்கிறேன் (2)
என்றோ அழிஞ்சு போகவேண்டிய இந்த உசுரையும்
காப்பாற்றகிக் காத்து கரை சேர்த்துவைத்த தெய்வம் நீரல்லோ
கருவிலிருந்து என்னைக் காத்தவரே
உம்மை விலகிச்சென்ற ஒரு துரோகி நான்
உயர்வான வாழ்வைத் தந்தவரே
உம்மை மறந்து வாழ்ந்த ஒரு பாவி நான்
இரக்கம் நிறைந்தவர் நீரே
மனதுருக்கம் உடையவர் நீரே
என் வாழ்வில் தாழ்வினில்
என்னோடு இருந்தவரே
என்னைத் தள்ளிடாமலே
ஏற்றுக் கொண்டவரே
புழுதியில் இருந்த என்னையும்
உந்தன் புகழைப் பாடிட வைத்தவரே
தகுதி இல்லாத என்னையும்
உந்தன் கருவியாய் மாற்றி மகிழ்ந்தவரே
அன்பின் உருவம் நீரே
அரைவணைப்பின் சிகரம் நீரே
உம்மைப் போற்றி பாடியே
எந்நாளும் துதித்திடுவேன்
என் ஜீவ நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன்