Unmayana Anbirkaai Lyrics – உண்மையான அன்பிற்காய்
உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்
என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்
துணையாக யார் வருவார்
தரிசித்தேன் நான் தரிசித்தேன்
நம்பிக்கையற்ற சூழலில்
வெறுமையான வாழ்க்கையில்
இயேசுவை நான் தரிசித்தேன் -உண்மையான
சோர்வுகள் என் இதயத்தை
சூழ்ந்திருந்த வேளையில்
நான் நம்பின எல்லோரும்
என்னை கைவிட்ட வேளையில்
கண்ணீரே எந்தன் உணவானதே
கட்டுகளோடே வாழ்ந்திருந்தேனே
உமது வருகையே மகிழ்வை அளித்ததே
உமது நேசமே என்றென்றும் போதுமோ – உண்மையான
ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்
ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்
உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததே
ஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததே
உமக்காகவே நான் என்னையே தருகின்றேன்
உமக்காகவே நான் இறுதி வரை காத்திருப்பேன் – உண்மையான