Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக
Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக
உயிரோடு ஓர் உயிராக
ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவே
என்னில் கரைந்த இயேசுவே
எலும்போடு எலும்பாக
என் சதையோடு சதையாக
நரம்போடு நரம்பாக – என்
இரத்தத்தில் இரத்தமாக
உடல் முழுதும் கலந்தீரே
உயிரிலும் கரைந்தீரே
நினைவோடு நினைவானீர்
என் கனவோடு கனவானீர்
பேச்சோடு பேச்சானீர்- என்
மூச்சோடு மூச்சானீர்
என்னிலே என்னை தேடினாலும்
உம்மை தான் காண கூடும்
நீர் இன்றி ஒரு நொடியும்
நான் வாழ்ந்திட கூடுமோ
நீர் இல்லா வாழ்வதனை
நான் வாழ்ந்திட வேண்டுமோ
வாழ்வில் எதை இழந்தாலும்
உம்மை இழந்திடுவேனோ
எனக்காக உயிரை தந்து
உம் அன்பிலே விழ வைத்தீர்
வருவேன் என்று போய்விட்டு
என் நெஞ்சையே ஏங்க வைத்தீர்
எப்போது நீர் வருவீர் ஐயா
எப்போது உம்மை காண்பேனோ