Uyirthaar Unnathar Uyirthaar – உயிர்த்தார் உன்னதர் உயிர்த்தார்
Uyirthaar Unnathar Uyirthaar – உயிர்த்தார் உன்னதர் உயிர்த்தார்
உயிர்த்தார் உன்னதர் உயிர்த்தார்
அவர் சொன்னபடியே உயிர்த்தார்
உதித்தார் உத்தமர் உதித்தார்
வெற்றியின் சாட்சியாய் உதித்தார்
மானுடம் மீட்டார் நம் மெசியா
மாண்புடன் சொல்லுவோம் அல்லேலூயா
பாவத்தால் மூடிய விண் கதவு
பாசத்தால் இனி சொல்லும் நல் வரவு
திறந்தார் இறை மகன் நமக்காக
திருந்தி வாழ்வோம் நலமாக
ஆதியில் கூடிய துயர நிலை
ஆண்டவர் அருளினால் இனி இல்லை
இறந்தார் நமக்கென மேய்ப்பராக
உயிர்த்து எழுந்தார் மீட்பராக