Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு
Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு
உயிர்தெழுந்த இயேசு
இன்னும் ஏங்கூட – 4
1.பசுமை நிறைந்த புல்லில்
புசிக்கச் செய்தவரே
அமர்ந்த நீறுற்றண்டை
என் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த
2.ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையிலே
தமது நாமத்தின் நிமித்தம்
என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த
3.மரண இருளின் வேளையில்
தேவரீா் என்னோடே
உமது கோலும் தடியுமே
என்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த
4.சத்துருக்கு முன்பாக
பந்தியை ஆயத்தப்படுத்துபவா்
தலையை உயா்த்தி எண்ணெயால்
அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த
5.ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடருமே
கா்த்தருடைய வீட்டிலே
நிலைத்திருப்பேனே – 2 – உயிர்தெழுந்த