Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு
Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
பாதாள வல்லமை தகர்த்தெரிந்தார்
பரலோக வாசலை திறந்துவிட்டார்
பரம சந்தோஷம் தந்துவிட்டார்
அல்லேலூயா ஓசன்னா…
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லை
காவல் சேனை தடுத்திட முடியவில்லை
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்
சாவுக்கு மணியடித்தார்
சாபப்பிசாசை ஜெயித்துவிட்டார்
மரணத்தின் கூர் ஒடித்த தேவனுமிவர்
பாதாளத்தில் ஜெயமெடுத்த ராஜனுமிவர்
வேதாளங்கள் நடுங்கிடுதே
பாதாளமும் பயந்திடுதே
பேய்களும் ஓடிடுதே
எல்லா நோய்களும் மறைந்திடுதே
வானம் பூமி படைத்திட்ட தேவனுமிவர்
வழியும் சத்தியம் ஜீவனுமானவர் இவர்
ஆதியும் அந்தமும் இவர்
அல்பா ஒமேகா இவர்
இருந்தவர் இருப்பவரே
இனியும் வரப்போகும் ராஜா இவர்