Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல
வானதூதர் சேதி சொல்ல
ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள
பனி சொட்டும் நல்ல இரவில்
எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே
உன்னை காண கோடி கண்கள்
வேண்டும் இந்த ஜென்மத்தில்
என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே
உன்னை என்ன சொல்லி பாடும் மனமே
சரணம் 1
உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும்
எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய்
உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும்
எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய்
வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட
என் மடியில் தவழும் மன்னவனே
வானம் சுமந்த பாலகனே
சரணம் 2
மங்கள வார்த்தையை நான்கேட்ட போது
எந்தன் உள்ளத்தில் வந்தது திகைப்பு
உன்னை கருவினில் உயிர் கொண்டபோது
மனதின் ஆழத்தில் ஆனந்த களிப்பு
என்ன தவம் நான் செய்தேனோ தேவ மகனை நான் சுமக்க
மானுடம் மீட்க வந்தவனே
மகிழ்ந்து பாடும் என் மனமே