Vaareroo Vinai Therero – வாரீரோ வினை திரீரோ

Deal Score0
Deal Score0

வாரீரோ வினை திரீரோ

பல்லவி
வாரீரோ? வினை தீரீரோ? எனைக்
காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு

அனுபல்லவி

வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ

சரணங்கள்
1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ

2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை[2] செய்வீர், யேசு, – வாரீரோ

3. காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். – வாரீரோ

4. வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;
கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி. – வாரீரோ

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo