Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே

Deal Score+1
Deal Score+1

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன்
வார்த்தை நிறைவேறிற்றே
வான தூதர்கள் வாழ்த்துரைக்க
வானவர் வையகம் வந்தாரே

1. பாவத்தை போக்கிடும் பகலவனே
பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி
பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட
பாலனாய் பாரிலே பிறந்தாரே

2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த
நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின்
நிலையை தோழியே சுமக்க
நித்திய இராஜனாய் உதித்தாரே

3. ஆதியும் அந்தமும் ஆனவரே
அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின்
அடிமை ரூபமே எடுத்தார்
அவரின் ஆட்சிக்கு முடிவில்லை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo