Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே
பல்லவி
வாழ்வை நம்பாதே – மனமே
வாழ்வை நம்பாதே
அனுபல்லவி
தாழ்வில்லாத நமது சுவாமி
தாழைத் தேடிப் பாவம் விடு
சரணங்கள்
1. எத்தனை பேர் புவி ஆண்டார் – அவர்
எல்லாவரும் முன்னே மாண்டார் – இங்கு
செத்தவரில் எவர் மீண்டார்
தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி – வாழ்
2. இன்று பல்லக்கினில் போவார் – நாளை
எடுக்கும் ஆட்களும் ஆவார் நரர்
என்றவர் யாவரும் சாவார் – மதி
யீனர் நரகத்தில் சேர்வார் – புவி – வாழ்
3. எண்ணிக்கை இல்லாமல் இங்கே – முன்னாள்
இருந்த பேரெல்லாம் எங்கே? – நாளை
எண்ணிப் பிழைப்போம் நாம் – இங்கே
இயேசு நாயகனே நம் பங்கே – புவி – வாழ்