வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam sei lyrics
வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam sei lyrics
பல்லவி
வேதத்தைத் தியானம் செய்
சேதம் வராதே – என் மனமே
சரணங்கள்
1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம்
விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை
2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம்
களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை
3. இருபுறமும் கருக்கான பட்டயமாம்
உருக்கிடும் கருவியாம் – வேதத்தை
4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம்
பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை
5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி
மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை
6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம்
அழித்திடும் அக்கினியாம் – வேதத்தை
7. வானத்தைச் சேர்ந்த ஞானப்பாலாம்
பானமே செய்திடலாம் – வேதத்தை