Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும்

Deal Score0
Deal Score0

பல்லவி

வேறு ஜென்மம் வேணும்,-மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்

சரணங்கள்

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo