வெற்றி வெற்றி – Vettri Vettri lyrics
வெற்றி வெற்றி – Vettri Vettri lyrics
1. வெற்றி வெற்றி வெற்றி
அற்புதர் இயேசுவால் வெற்றி
அன்றும் இன்றும் என்றுமே வெற்றி
அன்பர் இயேசு இரட்சிப்பால் வெற்றி
அந்தரங்கம் அனைத்திலும் வெற்றி
அந்தகார சக்திகள் மேலும் வெற்றி
சோதனை வேதனை நெருங்கினாலும்
சாத்தானின் சதிகள் பெருகினாலும்
சோர்ந்திடாதே ஓடிடாதே
இயேசுவையே பார்
2. வெற்றி வெற்றி வெற்றி
வேதத்தை வாசிப்பதால் வெற்றி
வேதத்தைத் தியானிப்பதால் வெற்றி
வேதத்தை நேசிப்பதால் வெற்றி
வேத வசன பாடல்களில் மகிழ்ச்சி
வேதம் கொண்டு செல்வதும் சாட்சி – சோதனை
3. வெற்றி வெற்றி வெற்றி
ஊக்கமான ஜெபத்தால் வெற்றி
உண்மையான ஜெபத்தால் வெற்றி
ஊழியர்க்காய் ஜெபிப்பதில் வெற்றி
உன்னில் அவர் சித்தம் செயலாற்றி
உலகை அவர் சொந்தமாக மாற்று – சோதனை
4. வெற்றி வெற்றி வெற்றி
விசுவாச ஐக்கியத்தில் வெற்றி
விண்ணவரின் ஐக்கியத்தில் வெற்றி
விண்ணரசர் ஐக்கியத்தில் வெற்றி
விண்ணப்பங்களை ஏறெடுப்போம் கூடி
விண்ணுலகம் சேர்வோம் அங்கும் வெற்றி – சோதனை