விதைப்பும் அறுப்புமே – Vithaippum Aruppumae lyrics

Deal Score+1
Deal Score+1

விதைப்பும் அறுப்புமே – Vithaippum Aruppumae lyrics

1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய்
வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

பல்லவி

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே – இன்று
பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர்

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து – சிந்திப்பீர்

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ?
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்
படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo