Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics
சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2
யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2
கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லை
கட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லை
ஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்
ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர்
யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2
பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்
பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்
நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்
நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும் இயேசுவின் ஆட்சி நிலைக்கும்
யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2
சபையாய் தைரியமாய் சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2