ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

Deal Score+1
Deal Score+1

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

பல்லவி

ஏசையா, பிளவுண்ட மலையே,
மோசநாளில் உன்னில் மறைவேனே.

சரணங்கள்

1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;
தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா

2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,
மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா

3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,
நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா

4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சித்
திருச்சிலுவை தஞ்சம் புகுந்து,-தியங்கி அணைத்தே நிற்பேன்; – ஏசையா

5. அருளில்லாதோன் ஆனாலும், அபயமுன்றன் நீதிக்கே!
கருணை ஊற்றில் கழுவமாட்டாயோ?-கழுவாயாகில் சாவேனே; – ஏசையா

6. ஜீவனோடே தங்கினாலும், தெளிகண் சாவில் மங்கிலும்,
தேவாசனமுன் அஞ்சி நிற்கத்-தேவலோக மேறிலும், – ஏசையா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo