
Yesu Naamam Kondu Sellu – இயேசு நாமம் கொண்டு செல்லு
1. இயேசு நாமம் கொண்டு செல்லு
துன்பம் துயரமுள்ளோரே
இன்பம் ஆறுதல் தருமே
எங்கிலும் எடுத்து செல்லு
பல்லவி
இனிய நாமமே
நம் நம்பிக்கை பேரானந்தம்
2. இயேசு நாமம் கொண்டு செல்லு
தற்காக்கும் கேடயம் போல்
சோதனை உன்னை சூழ்ந்திடில்
ஜெபி, சுவாசி அந்நாமம்
3. விலையேறப் பெற்ற நாமம்
ஆன்மாவை மகிழ்விக்கும்
கரத்தால் தழுவும் போது
நாவு துதிபாடிடும்
4. இயேசு நாமத்திலே அவர்
பாதம் விழுந்து வணங்கும்
பரலோக இராஜனை நாம்
வாழ்த்துவோம் நம் முடிவில்

