Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை
Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை
இயேசு ராஜா உம் நாமத்தை
சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
உந்தன் அன்பை என் உள்ளத்தில்
எண்ணி எண்ணி துதிபாடுவேன்
ஆமென் ஆமென் அல்லேலுயா-4
1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
பரமனே உம் அன்பு மிகப்பெரியது
பாரினில் நிகரேதும் இல்லாதது
2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
வார்த்தையினாலே என்னைத் தேற்றி
வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்
3.உலகமே என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
நீதியின் தேவன் என்னோடு உண்டு
நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்