Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே
இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே-2
அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா-2
ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில-2
பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2
வான தூதர்கள் பாட்டுப்பாட
ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2
பாவியை மீட்க வந்த பாலகனை
பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2
நட்சத்திரம் பின்னால போவோமா
நாயகனை கண்டு நம் தொழுவோமா-2
பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா
பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2