Yesu rajan vanthuvittaar – இயேசு இராஜன் வந்துவிட்டார்
இயேசு இராஜன் வந்துவிட்டார்
நாம் கூடும் இந்த இடத்திலே
ஓசன்னா ஓசன்னா
இருளான உன் வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசுதான்
நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும்
சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே
அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே
ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனலாய் நாமும் கொழுந்து விட்டெறிய
அக்கினி இறங்கிடுதே
ஆசீர்வதிக்கும் கரங்களே நம்
சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகமும்
பெலனும் பாய்ந்து வருகின்றதே