Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்
Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்
1.அன்பே உருவாய் அவனிதனிலே
வந்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
அன்பனே ஸ்தோத்திரம்
அன்பினாலே ஆட்கொண்டவனே
அசைவாடுவாய் ஸ்தோத்திரம்
2. உன்னத ராஜனே ஸ்தோத்திர பலிக்கு
பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உன்னதரே ஸ்தோத்திரம்
உன்னதத்திலிருந்து ஆசீர் பொழியும்
உன்னதா ஸ்தோத்திரம்
3. கருணையாலே கண்மணி போல
காத்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கருணையோனே ஸ்தோத்திரம்
கருணைக் கடலே கடந்து வந்து
கடாட்சிப்பாய் ஸ்தோத்திரம்
4. விசுவாசிகளின் தகப்பனாகிய
ஆபிரகாமின் தேவா தேவா
விசேஷமாய் வா வா
விரும்பி வருந்தி அழைக்கும் எங்களின்
விண்ணப்பம் கேட்க வா வா