Yesuvai Nambuvorkku – இயேசுவை நம்புவோருக்கு
1. இயேசுவை நம்புவோருக்கு
செய்யவொண்ணா தொன்றில்லையாம்;
பயமின்றி உந்தன் வாக்கு
தேவே ஏற்றுக்கொண்டோமே நாம்;
விசுவாசித்தேன் என் தேவனே;
செய்யவொண்ணா தொன்றில்லையே!
2. மகா வருத்தமானதாம்
நான் பாவமுற்றிருப்பது
நம்பிக்கையா லிதாகுமாம்
இயேசுவின் சத்ய வாக்கிது!
விஸ்வாசித்தேன் என் தேவனே;
பெறவொண்ணா தொன்றில்லையே!
3. விஸ்வாசம் நீர் பூரிப்பதால்
உம் சாயலைப் போலாகுவேன்
செய்கை எண்ணம் வசனத்தில்
இடறலின்றி ஜீவிப்பேன்
துஷ்டரோ பேயோ சீறட்டும்
எனக்கேலாதொன் றில்லையாம்!
4. சர்வ வல்லவர் தேவனே!
மானிடர் பலன் கிறிஸ்துதான்
நான் புதிதான வுடனே
கிறிஸ்துவினால் பிரகாசிப்பேன்
பாவம் வெல்லும் ஆன்மத்திற்கே
வெல்லவொண்ணா தொன்றில்லையே!