
இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam
இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam
இறைவன் இணைத்த இருமணமாம் – இது
இயேசு அருளிய திருமணமாம்
திருமணம் யாவும் தேவனின் பரிசு
திகையாதே இனி கர்த்தரின் பொறுப்பு
மறைநூல் என்னும் வேதத்தை படிக்க
மறவாதே என்றும் மறவாதே
கறையில்லா வாழ்க்கை இனிதாகும்
கர்த்தரின் பார்வைக்கு நலமாகும்
பத்துக்கட்டளை வழிநடந்தாலே
மலர்ந்திடுமே இன்பம் தொடர்ந்திடுமே
ஜெபமே ஜெயம் அதை மறவாதே
அதை தினமும் ஜெபித்திட மறவாதே
திருமணம் என்றால் ஒருமணம் தானே
இருமனம் கலந்து இனிதுடன் வாழ்க
கரும்பென இனிப்பது வாழ்வாகும் – நாம்
கர்த்தரில் வாழ்வது உயர்வாகும்
நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
In the body of his flesh through death, to present you holy and unblameable and unreproveable in his sight:
கொலோசெயர் : Colossians : 1:22