அதிகாலையில் தினம் தேடினால் – Athikaalaiyil Thinam Theadinaal
அதிகாலையில் தினம் தேடினால் – Athikaalaiyil Thinam Theadinaal
அதிகாலையில் தினம் தேடினால்
உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா
துதிக்குப் பாத்திரரே தூய ஆவியே x 2
ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே x 2
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
சரணங்கள்
1. இரவொன்று வந்து பகலென விடிவது
இறைவா உம் அற்புதமே
உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
தேவா உம் சித்தமே
இருளினை நீங்கும் வெளிச்சமும் நீரே
இணையில்லா பேரொலியே
இரக்கத்தை தேடி ஜெபித்திடுவோர்க்கு
குறைவில்லா உம் கிருபையே
2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க் கெல்லாம்
கசப்பும் இணிப்பாகுமே
கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால்
கவலைகள் பரந்தோடுமே
காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால்
கேட்பது ஜெயமாகுமே
வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால்
வல்லமை உனை சூழுமே
3. நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
சத்திய வேத வார்த்தையை கேட்டு
சாட்சியாய் நடமாடு
நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
அன்பினில் உறவாடு
நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி
நன்மையால் முடிசூடு – நீ