அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa
அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa
அன்பனே விரைவில் வா – உன்
அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2)
1. பாவச் சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன் (2)
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்
2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)
வாழ்வின் உணவே உன்னையே நான்
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்
3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்
இதயம் நொந்து அழுகிறேன் (2)
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்
அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa