அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan
அன்பரே உம்மை நான்
தினமும் பாடுவேன்
என் ஆயுள் நாளெல்லாம்
உமக்காய் நான் வாழுவேன்
உந்தன் நாமம் சொல்லுவேன்.
குயவன் கைகளின் களிமண் போல் நானும்
உமது கரங்களில் இருக்கச் செய்தீர்
உடைந்து போன என்னை
மீண்டும் உருவாக்கினீர்
நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர்
உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர்
எந்தன் புலம்பல்களைக்
களிப்பாக மாறச் செய்தீர்
தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர்
சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்துக்கொண்டீர்.