ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்-AARAATHIPPEN NAAN AATHMA MANALAN

Deal Score0
Deal Score0

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2)
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே 2
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை (2)

தூதசேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை
ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2)
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன்

அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் (2)
நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo