உன்னதங்களில் உம்மோடு – Unnathangalil ummodu
உன்னதங்களில் உம்மோடு – Unnathangalil ummodu
உன்னதங்களில் உம்மோடு கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே
அழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து
வைத்த என் இயேசுவே என் நேசரே
தூக்கி எடுத்தீரே
என்னை புது சிருஷ்டி ஆக்கினீரே
ஆழ படைத்தவரே
கையில் அதிகாரம் தந்தவரே
திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு
ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவே
வெற்றி வாழ்வை இவுலகில் வாழ
அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே
தெரிந்து கொண்டீரே
என்னை நீதிமான் ஆக்கினீரே
வாழ வைப்பவரே
என்னை வழுவாமல் காப்பவரே
நானே வழி நானே சத்யம் நானே ஜீவன்
உயிர்த்தெழுதல் என்றவரே என் இயேசுவே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையேநான்
நம்புவேன் என் இயேசுவே என் நேசரே
கிரையத்துக்கு கொள்ளப்பட்டேனே
நீர் தங்கும் ஆலயம் நானே
உயிருள்ள தெய்வமே
என் உயிரோடு கலந்தவரே
உன்னதங்களில் உம்மோடே கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே
Additional stanza –
கிருபையையும் நீதியையும் அளவில்லாமல்
என்னக்கு தந்த இயேசுவே என் இயேசுவே
ஜீவன் சுகம் பெலன் ஐஸ்வர்யம் உன்னக்கு
சொந்தம் என்ற தந்த இயேசுவே என் நேசரே
மீட்டு எடுத்தீரே
என்னை உயர்த்தி வைத்தீரே
என்ன நான் செய்திடுவேன்
இவ்வளவாய் அன்பு கூர்ந்திரே