என்னால் ஆனதென்றுசொல்ல – Ennal aanadhentru solla
என்னால் ஆனதென்றுசொல்ல – Ennal aanadhentru solla
என்னால் ஆனதென்றுசொல்ல ஒன்றுமே இல்ல
ஆனதெல்லாம் ஆண்டவனின் கிருபையல்லோ
படிப்பில் தீரனில்லை
பட்டங்கள் பயனுமில்லை
கல்விமான் நாவு தந்தீர் கிருபையல்லோ
சொந்தங்கள் கூட இல்ல
பந்தங்கள் பக்கம் இல்ல
பரலோக பந்தம் தந்தீர் கிருபையல்லோ
சொத்துக்கள் ஏதும் இல்ல
பத்தின்மேல் பற்றும் இல்ல
பரலோகில் வீடு தந்தீர் கிருபையல்லோ
லேவியின் கோத்ரம் இல்ல
ஆரோனின் வம்சம் இல்ல
ஆசார்ய ஊழியம் தந்தீர் கிருபையல்லோ
Ennal aanadhentru solla song lyrics in English
Ennal aanadhentru solla ontrume ille
Aanadhellaam andavanin kirubaiyallo
Padipil dheeran ille pattangal payanum ille
Kalvimaan naavu thantheer kirubaiyallo – enaal
Sondhangal kooda ille bandhangal pakkam ille
Paraloga bandham thantheer kirubaiyallo – enaal
Sothukkal ethum ille pathin mel partum ille
Paralogil veedu thnatheer kirubaiyallo – enaal
Leviyin kothram ille aaronin vamsam ille
Aasarya oozhiyam thantheer kirubaiyallo – enaal
Andavarin Kirubaiyallo| ஆண்டவரின் கிருபையல்லோ | New Tamil Christian Song
கடந்த வருடம் (2022) ஒரு வெள்ளிக்கிழமை ஆராதனையில், எங்கள் போதகர் டேவிட் மனோராஜ் அவர்கள், தேவனாம் இயேசு தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை கிருபையுள்ளவாராக இருக்கிறார் என்பதை தன் மகன் வாழ்வில் நிகழ்ந்த சில அற்புத சாட்சிகளுடன் பிரசங்கித்தார்கள்.
அந்த நாள் எல்லா விசுவாசிகள், ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் இருக்கும் தேவ கிருபையை பிரசித்தப்படுத்தும்விதமாக தேவனாகிய கர்த்தர் இந்த பாடலை ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பில்லிங் கௌண்டரில் (billing counter) நிற்கும்போது அடியேனுக்கு தேவன் தந்தருளினார். அந்த பாடலை அன்பு சகோதரர் கலைவாணன் அவர்களின் இசை வனைவோடு இதோ தேவ மகிமைக்காக இங்கே படைக்கிறோம்.
வாருங்கள் நாம் இணைந்து நம் தேவனாம் கர்த்தரின் கிருபையை பறைசாற்றுவோம். அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்.