என்னோடு நீர் இருப்பதினால் – Ennodu Neer Iruppathinaal
என்னோடு நீர் இருப்பதினால் – Ennodu Neer Iruppathinaal
என்னோடு நீர் இருப்பதினால்
நான் வெட்கப்பட்டு போவதில்லை
என் துணையாய் நீர் வருவதினால்
என்னை கண்ணீர் சிந்த விடுவதில்லை
நன்றி உமக்கே நன்றி நன்றி ஐயா
நன்றி உமக்கே நன்றி நன்றி ஐயா
1. இதோ பரதேசியாய் நான் அலைந்து திரிந்ததெல்லாம்
சுதந்திரமாய் எனக்கு மாற்றித் தந்தீரையா
நான் வெறுமையாய் வந்த தேசத்தில் என்னை வாழ வைத்தீரையா
ஒன்றுமில்லாமல் சென்ற தேசத்தில் என்னை செழிக்க வைத்தீரையா – நன்றி
2. இதோ கண்ணீர் விட்டு கதறி நான் அழுதிட்ட போதெல்லாம்
என் கண்ணீர் துடைக்கப் புது வழிதனை திறந்தீரையா
புது வாழ்வை தந்து புது வாய்ப்பை தந்து
உம்மை துதிக்க வைத்தீரையா
புது வாழ்வை தந்து புது வாய்ப்பை தந்து
என்னை பயன்படச் செய்தீரையா – நன்றி
Nandri Umake | Sam Sathish | Ranjith Jeba | BPM | Tamil Christian Song