Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்?
2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்ந்தர வணைத்தீரே:
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே .
3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்.
4. நாவிழி செவியை நாதனே, இந்த
நாளெல்லாம் நீர் காரும்.
தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
தெய்வமே , அருள் கூரும் .
5.கைகாலால் நான் பவம் புரியாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
தூய் வழியே செல்லும்.
6. ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
உதவி நீர் செய்வீரே .
ஏழை நான் உமக்கே இசையானால் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே.
7. அத்தனே ! உமது மகிமையை நோக்க
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும், மெய் விசுவாசம்
தேவனே உமக் கேற்க.
8. இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப்
பூவுலகில் கடத்த
9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்
தந்தையே , நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந் தாரும்