ஒரு தென்றல் நம்மைத் தேடி – Oru Thentral Nammai Theadi
ஒரு தென்றல் நம்மைத் தேடி – Oru Thentral Nammai Theadi
ஒரு தென்றல் நம்மைத் தேடி உறவாய் தொடுகிறதே
ஒரு தெய்வம் நெஞ்சம் தேடி உணவாய் வருகிறதே
ஒரு வானம் என்னில் வந்த திருநாள் இதுவன்றோ
ஒரு தீபம் கண்ணில் தந்த ஒளிநாள் இதுவன்றோ
ஒரு வார்த்தை தந்ததொரு ஆனந்தம்
ஒருநாளும் தீர்வதில்லை பேரின்பம்
தலைவன் தந்திடும் விருந்தாகும்
தகுதிகள் என்பது அன்பாகும்
தன்னலங்கள் இல்லா வாழ்வில்
சுகம் அளிக்கும் மருந்தாகும்
இதம் அளிக்கும் விருந்தாகும்
1. முடிவே இல்லா வாழ்வினை அருளும்
மூவொரு இறைவனின் வரவாகும்
முனைந்தே பெறுபவர் வாழ்வினில் அடையும்
முத்தமிழ் மழையின் பொழிவாகும்
அறம் பொருள் இன்பம் அனைத்தின் நிறைவாகும்
நலம் தரும் செல்வம் அனைத்தின் விதையாகும்
அருந்திட உணவை ஆருயிர் இறையை
அன்புடன் வாழ ஏற்றிடுவோம்
சீருடன் வாழ ஓருடலாக
சீதனமாய் வரும் உணவாகும்
பேதங்கள் இல்லா சமத்துவ வாழ்வின்
சின்னமாக வரும் உடலாகும்
உண்டிடும் அப்பம் பலுகிடும் கிண்ணம்
எல்லாம் இங்கே ஒன்றாகும்
ஒருவரை ஒருவர் அன்பினைச் செய்து
வாழ்ந்திட உலகம் நன்றாகும் ஆ
அம்மையப்பன் அன்பை எல்லாம்
அள்ளி வரும் தென்றல் காற்றே
இம்மையிலும் மறுமையிலும்
வாழ்வு தரும் தெய்வ ஊற்றே
2. உலகம் புதிதாக உறவுகள் வலுவாக
உடைபடும் அப்பம் இதுவாகும்
வானகம் திறந்து வையகம் வந்திடும்
வானகத் தந்தையின் கொடையாகும்
நீதியில் அமைதி கொணர்ந்திடும் சக்தியிது
ஆதியின் பகிர்வை அரங்கேற்றும் ஆற்றலிது
பாவியின் நண்பன் ஏழையின் தோழன்
இயேசுவின் விருந்தை அருந்திடுவோம்
ஒரு செடி அவரில் ஒரு கிளையாய் நாம்
ஒவ்வொரு நாளும் ஒன்றிப்போம்
வரும் தடை எல்லாம் இலட்சிய முடனே
அவர் பெயர் சொல்லி சந்திப்போம்
தாரணி முழுதும் ஓர் குடும்பம் என
இயேசுவின் கனவினை சிந்திப்போம்
பேரணியாய் இனி புதுயுகம் காண
பாருலகில் நாம் பயணிப்போம்
கா கப மா பா மத தா பா கம பத நீ
அம்மையப்பன் அன்பை எல்லாம்
தனனானே னானானானே னானானானானா
தனனானே னானேனானே னானானானானா